காதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி

காதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி
Updated on
1 min read

தன் காதலி செளந்தர்யாவைத் திருமணம் செய்துள்ளார் 'கலக்கப்போவது யாரு' யோகி.

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான காமெடி நிகழ்ச்சி 'கலக்கப்போவது யாரு'. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பலரும் திரையுலகில் காமெடியன்களாக வலம் வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சாமியார் வேடமிட்டு காமெடி செய்ததன் மூலம் பிரபலமானவர் யோகி. இவரும் சில படங்களில் நடித்துள்ளார்.

இந்தக் கரோனா ஊரடங்கு சமயத்தில் தன் காதலி செளந்தர்யாவைத் திருமணம் செய்துள்ளார் யோகி. இவர்களுடைய திருமணம் ஜூன் 24-ம் தேதி நடைபெற்றது. இருவரின் குடும்பத்தினர் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

யோகி - செளந்தர்யா இருவருமே பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது இருவருக்குள்ளும் காதல் வரவில்லை. கல்லூரி ரீ-யூனியன் சந்திப்பின்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவருமே வீட்டில் தெரிவிக்க, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

கரோனா ஊரடங்கு சமயத்தில் இந்தத் திருமணம் நடைபெற்றதால், அவரது நண்பர்கள் அனைவருமே சமூக வலைதளத்தில் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in