தந்தையரை போற்றும் வகையில் ‘எந்தை’ 7 நிமிட குறும்படம்- வினிஷா விஷன் வெளியீடு

தந்தையரை போற்றும் வகையில் ‘எந்தை’ 7 நிமிட குறும்படம்- வினிஷா விஷன் வெளியீடு
Updated on
1 min read

சென்னையை சேர்ந்த விளம்பர ஏஜென்ஸியான வினிஷா விஷன் நிறுவனம், தந்தையர் தினத்தை முன்னிட்டு ‘எந்தை’ என்ற 7 நிமிட குறும்படத்தை வெளியிட்டுள்ளது.

வினிஷா விஷன் அட்வர்டைஸ்மென்ட் ஏஜென்ஸியின் நிர்வாக இயக்குநரான கே.வி.கதிரவன், டாக்டர் வினிஷா கதிரவன் பிரதானகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜய் டி.குமார் இயக்கியுள்ள இப்படத்துக்கு சதீஷ் ஒளிப்பதிவும்,குமார் ஆன்லைன் எடிட்டிங்கும்செய்துள்ளனர். இசையமைப்பாளர் கண்ணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து கே.வி.கதிரவன் கூறியபோது, ‘‘இது ஒருநடுத்தர கிராமத்து விவசாயி குடும்பம் பற்றிய கதை. இயற்கையான சூழல், ஆரோக்கிய உணவுமுறையுடன் வாழ்க்கையை நகர்த்தும் அவர்கள், குழந்தைகள் கல்வி உள்ளிட்ட தேவைகளை எப்படி சமாளிக்கின்றனர் என்பதாக கதை நகரும். பெரும்பாலும் தாயுடன்நெருங்கிப் பழகும் பிள்ளைகள், தந்தையிடம் இருந்து விலகியேஇருக்கின்றனர். தந்தையின் அயராத உழைப்பு, தியாகத்தை இந்த 7 நிமிட குறும்படம் உணர்த்தும். தந்தையர் தினம் 21-ம் தேதி (இன்று) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, யூ-டியூப் உள்ளிட்ட வலைதளங்களில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது’’ என்றார். இப்படத்தின் கிரியேட்டிவ் ஹெட்டாகவும் அவர் பணியாற்றி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in