சுஷாந்த் சிங்கின் மரணச் செய்தி கேட்டு தந்தையின் நிலை மோசமடைந்தது

சுஷாந்த் சிங்கின் மரணச் செய்தி கேட்டு தந்தையின் நிலை மோசமடைந்தது
Updated on
1 min read

சுஷாந்த் சிங்கின் மரணச் செய்தியைக் கேட்டு, அவருடைய தந்தையின் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மும்பையில் வசித்து வந்தாலும், இவருடைய சொந்த ஊர் பாட்னா. சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதும் பாட்னாவில் ராஜீவ் நகர் காலனியில் உள்ள அவரது வீட்டில் மக்கள் குவியத் தொடங்கினார்கள்.

அப்போது சுஷாந்த் சிங்கின் மரணச் செய்தி கேட்டதும், அவரது தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டது எனவும், அவரால் இப்போது பேச இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாட்னா வீட்டை கவனித்துக் கொள்ளும் லட்சுமி தேவி, சுஷாந்த் சிங்கின் மரணச் செய்தி தொலைபேசி வாயிலாக தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அவருடைய சகோதரி சண்டிகரிலிருந்து தற்போது பாட்னாவுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அவருடைய சொந்த ஊரில் உள்ள மக்கள் பலரும் சுஷாந்த் சிங்கின் மரணத்தை நம்பமுடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு சுஷாந்த் சிங் அவரது தந்தையிடம் பேசியதாகவும், விரைவில் பாட்னாவுக்கு வந்து தங்களை மலைப் பகுதிக்கு அழைத்து செல்வதாகத் தெரிவித்தார். ஆனால், அவர் வரவில்லை அவருடைய மரணச் செய்தி தான் வந்தது என்று லட்சுமி தேவி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in