அபிஷேக் பச்சன், நித்யா மேனன் நடிக்கும் வெப்சீரிஸ் - ‘ப்ரீத்: இன் டூ தி ஷேடோஸ்’

அபிஷேக் பச்சன், நித்யா மேனன் நடிக்கும் வெப்சீரிஸ் - ‘ப்ரீத்: இன் டூ தி ஷேடோஸ்’
Updated on
1 min read

அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள புதிய வெப் சீரிஸில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் நடித்துள்ளனர். இதற்கு ‘ப்ரீத்: இன் டூ தி ஷேடோஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தளத்தில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் அறிமுகமாகும் புதிய வெப் சீரிஸ் ‘ப்ரீத்: இன் டூ தி ஷேடோஸ்’. இந்த தொடரை அபுன்டான்டியா எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. க்ரைம் த்ரில்லர் வகையை சேர்ந்த இத்தொடர் ஜூலை மாதம் 10ஆம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.

இது குறித்து அமேசான் ப்ரைமின் இந்தியத் தலைவர் அபர்ணா புரோஹித் கூறியுள்ளதாவது:

அபிஷேக் பச்சன், நித்யா மேனன் நடித்துள்ள ‘ப்ரீத்: இன் டூ தி ஷேடோஸ்’ என்ற புதிய தொடரை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உலகம் முழுவதுமுள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சீட்டின் நுனியில் அமரவைக்கும் இந்த த்ரில்லர் தொடர் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறோம்’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in