Published : 06 Jun 2020 03:31 PM
Last Updated : 06 Jun 2020 03:31 PM

சிவப்பு நிறத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்கிறார்கள்; அமெரிக்க போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறார்கள்: இந்திய நடிகர், நடிகைகளை விமர்சித்த கங்கணா

இந்திய பிரபலங்கள் சிவம்பு நிறத்தை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களில் நடித்துக் கொண்டு வெட்கமே இல்லாமல் அமெரிக்க போராட்டத்திற்கு குரல் கொடுக்கிறார்கள் என்று பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்தார். இதில் ஃபிளாய்ட் உயிரிழந்தார். இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களைக் கிளப்பியுள்ளது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தொடரும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது. இந்த நிலையில் போராட்டக்கார்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் அமெரிக்க போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்திய பாலிவுட் பிரபலங்கள் பலர் Black Lives Matter என்று பதிவுகளை பதிவிட்டனர்.

இதுகுறித்து இந்திய நடிகை, நடிகர்களின் நிலைபாட்டை பிசிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கங்கணா ரணாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் கங்கணா ரணாவத் கூறியது,” பாலிவுட் பிரபலங்கள் எல்லா சமூக பிரச்சனைக்கு குரல் கொடுப்பதில்லை. அவர்கள் தேர்வு செய்து குரல் கொடுகிறார்கள். இந்திய பிரபலங்களில் பலர் சிகிப்பு நிற விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளித்து வருகின்றனர். ஆனால் இன்று அவர்கள் வெட்கமே இல்லாமல் அமெரிக்க போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு துணிவு இருக்கும்” என்று விமர்சித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x