கோவிட்-19 பாதிப்பு: பாலிவுட் தயாரிப்பாளர் அனில் சூரி காலமானார்

கோவிட்-19 பாதிப்பு: பாலிவுட் தயாரிப்பாளர் அனில் சூரி காலமானார்
Updated on
1 min read

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் தயாரிப்பாளர் அனில் சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 77.

இந்தச் செய்தியை அவரது சகோதரர் ராஜீவ் சூரி உறுதி செய்தார். தொற்று பாதிக்கப்பட்ட அனில் சூரிக்கு லீலாவதி மற்றும் ஹிந்துஜா மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்பட்டது என ஃபிலிம்ஃபேர் இணையதளம் கூறியுள்ளது.

மேலும் இறுதியாக அட்வான்ஸ்ட் மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவனையில் அனில் சூரி அனுமதிக்கப்பட்டதாகவும், வியாழக்கிழமை மாலை வென்டிலேட்டர் உதவி பொருத்தப்பட்டாலும் அன்று மாலை 7 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ராஜ் குமார், ஜிதேந்திரா, ரேகா நடிப்பில் 'கர்மயோகி' (1978), தர்மேந்திரா, சுனில் தத், கமல்ஹாசன் நடித்த 'ராஜ் திலக்' (1984) ஆகிய படங்களை அனில் சூரி தயாரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in