Published : 03 Jun 2020 11:47 AM
Last Updated : 03 Jun 2020 11:47 AM

செப்டம்பரில் மீண்டும் தொடங்குகிறது ‘மிஷன் இம்பாசிபிள்’ படப்பிடிப்பு

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மிஷன் இம்பாசிபிள்’. இப்பட வரிசையில் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘மிஷன் இம்பாசிபிள்: ஃபால்அவுட்’ திரைப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்படத்தை கிறிஸ்டோபர் மெக்குயரியிடமே அடுத்த இரண்டு பாகங்களை இயக்கும் பொறுப்பை பாராமவுண்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்குள் ‘மிஷன் இம்பாசிபிள்’ அடுத்த இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் முடித்து 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி 7 ஆம் பாகத்தையும், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி எட்டாம் பாகத்தையும் வெளியிட பாராமவுண்ட் நிறுவனம் முடிவு செய்திருந்தது.

இந்த ஆண்டு தொடங்கவிருந்த ‘மிஷன் இம்பாசிபிள் 7’ படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ‘மிஷன் இம்பாசிபிள் 7’ 2021 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியும், ‘மிஷன் இம்பாசிபிள் 8’ 2022 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதியும் வெளியாகும் என்று பாராமவுண்ட் நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள ‘மிஷன் இம்பாசிபிள் 7’ படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக படத்தின் உதவி இயக்குநர்களில் ஒருவரான டாமி கார்ம்லி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

4 நாட்கள் வெனிஸ் நகரத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். அதன் பிறகு கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நாங்க திட்டமிட்டுருந்த அனைத்து நாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தவுள்ளோம். அதற்காக வரும் செப்டம்பரில் தொடங்கி அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு டாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x