பிரபல சீரியல் நடிகையின் குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா தொற்று

பிரபல சீரியல் நடிகையின் குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா தொற்று
Updated on
1 min read

கரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து 91 ஆயிரத்து 819 பேர் குணமடைந்துள்ளனர். 93 ஆயிரத்து 322 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தொலைகாட்சித் தொடர் நடிகையான மோஹனா குமாரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநில சுற்றுத்துறை அமைச்சரும், மோஹனா குமாரியும் தந்தையுமான சத்பால் மஹராஜுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்த சூழலில் தற்போது மோஹனா குமாரி மற்றும் அவருடைய கணவர் சுயேஷ் ராவத், அவருடைய மாமியார் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மோஹனா குமாரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:

எங்கள் குடும்பத்தில் ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் நலமாக இருக்கிறோம். தற்போது நாங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். என்னுடைய மைத்துனருக்கு தற்போது கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. எங்களுக்கு அறிகுறிகள் மிகவும் குறைவாக இருந்தது. வானிலை மாற்றத்தால் அப்படி இருக்கிறது என்று முதலில் நாங்கள் நினைத்தோம். யாருக்கு பெரிய அளவில் அறிகுறிகள் தென்படவில்லை.

கரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவுகிறது. என் மாமியாருக்கு தான் முதலில் தொற்று ஏற்பட்டது ஆனால் அறிகுறிகள் இல்லாததால் எங்களுக்கு அது தெரியவில்லை. மருத்துவமனையில் இது எங்களுக்கு இரண்டாம் நாள். எங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மோஹனா குமாரி ‘ஏ ரிஷ்தா கியா கெஹ்லாதா ஹே’ என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in