Published : 29 May 2020 18:06 pm

Updated : 29 May 2020 18:06 pm

 

Published : 29 May 2020 06:06 PM
Last Updated : 29 May 2020 06:06 PM

'மின்மினி' படத்தின் தாமதம் ஏன்? -கதைக்களம் என்ன? - ஹலிதா ஷமீம் விளக்கம்

director-halitha-shameem-interview

'மின்மினி' படத்தின் தாமதம் குறித்தும், கதைக்களம் குறித்தும் இயக்குநர் ஹலிதா ஷமீம் விளக்கமளித்துள்ளார்.

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'சில்லுக் கருப்பட்டி'. சூர்யா இந்தப் படத்தை வாங்கி சக்திவேலன் மூலமாக வெளியிட்டார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.


தற்போது 'சில்லுக் கருப்பட்டி' படத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட 'மின்மினி' படத்தை துவங்கினார். ஆனால், அந்தப் படத்தின் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 'மின்மினி' பணிகளைத் தொடங்கியுள்ளார் ஹலிதா ஷமீம்.

இந்த இடைவெளி தொடர்பாக ஹலிதா ஷமீம், "2014-ம் ஆண்டு எனது முதல் படமான 'பூவரசம் பீப்பீ' வெளிவந்ததுமே 'மின்மினி' படத்தைத் துவங்கி விட்டேன். 'மின்மினி' படத்தில் சிறுவர்களாக இருந்த சிலர் வளர்ந்த பிறகு நடப்பதை காட்சிப்படுத்த வேண்டியிருந்தது. எனவே படப்பிடிப்புக்கு இடைவெளிவிட்டுக் காத்திருந்தேன். இப்போது அவர்கள் நான் எதிர்பார்த்த அளவு இன்னும் வளர்ந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

'மின்மினி' படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ஹலிதா ஷமீம், "தப்பிப் பிழைத்தவரின் குற்றம் என்பது எந்த அளவுக்கு உண்மை. நீங்கள் நேசிப்பரின் கனவுகளை நனவாக்க எந்த அளவுக்கு துணை நிற்கின்றீர்கள்? அன்பு செலுத்துவதற்கும் வெறுப்பிற்கும் மத்தியில் உள்ள மெலிதான கோடு என்ன? பெரியவர்களைவிட இளம் வயதினர் ஏன் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கிறார்கள்? அமைதியான மேகம் போலிருந்து என்னுள் இறங்கிய கேள்விகளுக்கு விடை காண நான் செய்யும் முயற்சியே 'மின்மினி'

இளம் பருவத்தினர், தப்பு செய்தும் சிக்கிக்காதவரின் குற்றவுணர்வு, அன்பு மற்றும் வெறுப்பு இவற்றுக்கிடையே உள்ள மெலிதான வேறபாடு, இளம் பருவத்தினரின் உணர்ச்சிகள் குறித்தெல்லாம் நிறைய கேள்விகள் எழுந்தாலும், இவற்றையெல்லாம் எளிமையாகவும் மென்மையாகவும் படத்தில் சொல்லியிருக்கிறேன்.

பதின் பருவத்தினரின் உலகில் நுழைந்து அவர்களின் உணர்ச்சிகரமான வாழ்வியலைப் படத்தில் பதித்தது எனக்கு இனிய அனுபவமாக அமைந்தது. உணர்ச்சிகளால் ஆளப்படும் இளம் பருவத்தினரின் இந்தப் பகுதியை மற்றவர்கள் புரிந்து கொள்வது சற்றே கடினமானது. வெற்றியைக் கொண்டாடுவது, காதலை வெளிப்படுத்துவது, தோல்வியை எதிர்கொள்வது என்று எந்த விதமான உணர்ச்சிகளையும் ஒரு விதமான அதீத தன்மையுடன் வெளிப்படுத்துபவர்களாக இருக்கின்றனர் பதின் பருவத்தினர்.

இது ஏன் என்ற கேள்வியே, பதின் பருவத்தினரைப் பிரதானப்படுத்தி ஒரு கதை எழுத எனக்குத் தூண்டுகோலாக அமைந்தது. படத்தைப் பற்றி மேலும் நான் விளக்குவதைவிட ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து ரசிப்பதுதான் சிறப்பாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் ஹலிதா ஷமீம்.

'மின்மினி' படத்தில் படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் கெளரவ் கலை, ப்ரவீண் கிஷோர் மற்றும் 'த்ரிஷ்யம்', 'பாபநாசம்' படங்களில் நடித்த எஸ்தர் அனில் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர். 'சில்லுக்கருப்பட்டி' படத்தில் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றிய மனோஜ் பரமஹம்ஸா மற்றும் அபிநந்த ராமானுஜம் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

தவறவிடாதீர்!


இயக்குநர் ஹலிதா ஷமீம்ஹலிதா ஷமீம்ஹலிதா ஷமீம் பேட்டிஹலிதா ஷமீம் கருத்துஹலிதா ஷமீம் பகிர்வுசில்லுக் கருப்பட்டிசில்லுக் கருப்பட்டி இயக்குநர்சில்லுக் கருப்பட்டி இயக்குநரின் அடுத்தப் படம்மின்மனிமின்மனி படம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author