Published : 28 May 2020 14:21 pm

Updated : 28 May 2020 14:21 pm

 

Published : 28 May 2020 02:21 PM
Last Updated : 28 May 2020 02:21 PM

'மாமனிதன்' வெளியீட்டில் அதிகாரமில்லை: இயக்குநர் சீனு ராமசாமி

seenu-ramaswamy-tweet

'மாமனிதன்' வெளியீட்டில் தனக்கு அதிகாரமில்லை என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள படம் 'மாமனிதன்'. யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார்.

தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற ‘மாமனிதன்’ படப்பிடிப்பு, 2019-ம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைந்தது. அதற்குப் பிறகு இந்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், வெளியீடு குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை.

தற்போது 'மாமனிதன்' வெளியீடு தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"’மாமனிதன்’ திரைப்படத்தில் நான்கு பாடல்களும் மற்றும் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகளையும் இசைஞானி இளையராஜா முடித்துவிட்டார். யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைப்பு செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை".

இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

இயக்குநர் சீனு ராமசாமிஇயக்குநர் சீனு ராமசாமி பேட்டிஇயக்குநர் சீனு ராமசாமி கருத்துஇயக்குநர் சீனு ராமசாமி பகிர்வுசீனு ராமசாமிவிஜய் சேதுபதிகாயத்ரிமாமனிதன் வெளியீடுயுவன்யுவன் சங்கர் ராஜாஇளையராஜாஒரு நிமிட வாசிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author