சந்தானத்தின் 'டிக்கிலோனா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சந்தானத்தின் 'டிக்கிலோனா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on

சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 'டிக்கிலோனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

எழுத்தாளர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி வந்த படம் ‘டிக்கிலோனா’. ‘பலூன்’ இயக்குநர் சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

யோகி பாபு, அனகா, ஷிரின் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் ஹர்பஜன் சிங்.

படப்பிடிப்பு அனைத்துமே முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது 'டிக்கிலோனா' படக்குழு. 3 நாட்களுக்கு சந்தானத்தின் 3 கதாபாத்திரத்தின் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி 'டிக்கிலோனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தானம் தனது ட்விட்டர் பதிவில் இதனை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் முதல் முறையாக சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தையுமே சென்னையைச் சுற்றிலும் மற்றும் சில காட்சிகளை அரங்குகளில் படமாக்கி முடித்துள்ளது படக்குழு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in