Published : 22 May 2020 04:40 PM
Last Updated : 22 May 2020 04:40 PM

கமலை நாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார்

கமல்ஹாசனை நாயகனாக அறிமுகம் செய்து வைத்த தயாரிப்பாளர் ரகுநாதன் சென்னையில் காலமானார். அவரது வயது 79.

பீம்சிங் இயக்கத்தில் 'களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் கமல்ஹாசன், 1975-ம் ஆண்டு, 'பட்டாம்பூச்சி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானார். ஏ.எஸ்.பிரகாசம் இயக்கிய இந்தப் படத்தை கே ரகுநாதன் தயாரித்திருந்தார்.

வியாழக்கிழமை அன்று வயது மூப்பின் காரணமாக சென்னையில் ரகுநாதன் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் கே.கே.நகரில் இருக்கும் அவரது வீட்டில் இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தன.

ரகுநாதன், 'பட்டாம்பூச்சி' படத்தில் கமல்ஹாசனை நாயகனாக அறிமுகப்படுத்தியதோடு, பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் என்பவரை இயக்குநராகவும், பெண்டியாலா ஸ்ரீனிவாசன் என்பவரை இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்து வைத்தார். இதுவரை ரகுநாதன் தயாரிப்பாளராக 6 படங்களை எடுத்திருக்கிறார்.

'சுபமுகூர்த்தம்' (1982), 'வலது காலை வைத்து வா' (1989) உள்ளிட்ட ஐந்து படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 2018-ம் ஆண்டு, 'மரகத்தக்காடு' என்ற படத்தை தயாரித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x