Published : 20 May 2020 01:03 PM
Last Updated : 20 May 2020 01:03 PM

எப்போதும் கமல்ஹாசனைக் கண்டு வியக்கிறேன்: ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனைக் கலைஞரின் மகள் நெகிழ்ச்சி

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஒப்பனைக் கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோர் ‘ஸ்டார் ட்ரெக்’ படங்களில் ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரிந்துள்ளார். 1985 ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்க்’ படத்தில் பணிபுரிந்ததன் மூலம் சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான ஆஸ்கர் விருது வென்றவர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக சினிமா செய்திகளைப் பகிரும் ட்விட்டர் பக்கம் ஒன்று கமல்ஹாசன் பற்றிய தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது. ஸ்டார் ட்ரெக் படப்பிடிப்பின்போது கமல்ஹாசன் அமெரிக்கா சென்று அங்கு மைக்கேல் வெஸ்ட்மோரிடம் 30 நாட்கள் உதவியாளராகப் பணியாற்றினார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தப் பதிவில் பின்னூட்டம் செய்திருந்த மைக்கேல் வெஸ்ட்மோரின் மகள் மெக்கென்ஸி வெஸ்ட்மோர், ''சிறுவயதில் கமல்ஹாசன் இந்தியாவிலிருந்து எங்கள் வீட்டுக்கு அன்பளிப்புகள் வாங்கி வந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் எப்போதும் அவரைக் கண்டு வியக்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் அவரைப் பார்ப்பது கூட ஒரு கனவாக இருந்தது. புகைப்படங்களைக் கண்டுபிடிக்கிறேன்'' என்று கூறியிருந்தார்.

இரு தினங்களுக்குப் பிறகு ‘விஸ்வரூபம்’ படப்பிடிப்பின் போது கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தையும், தானும் தன் தந்தையும் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து மெக்கென்ஸி வெஸ்ட்மோர் தனது ட்விட்டரில் வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

கமல்ஹாசனை உங்களுக்கு தெரியுமா என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். நான் சிறுமியாக இருந்தபோது கமலுடைய மேக்கப்களை என் தந்தை உருவாக்கினார். நான் தொடர்பில்தான் இருக்கிறோம், ஆனால் நான் அவரை கடைசியாக சில வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். இரண்டாவது புகைப்படத்தில் நானும் என் தந்தையும் கமல் பரிசளித்த அழகான இந்திய அழகான இந்திய ஆடைகளை அணிந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x