Published : 18 May 2020 01:11 PM
Last Updated : 18 May 2020 01:11 PM

வலிமையுடன் ஒரு போராளியைப் போல இருப்பீர்கள்: வனிதா விஜயகுமார் குறித்து மகள் ஜோவிகாவின் பதிவு

வலிமையுடன் ஒரு போராளியைப் போல இருப்பீர்கள் என்று வனிதா விஜயகுமார் குறித்து மகள் ஜோவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்புவரை சர்ச்சைக்கு பெயர் போனவர் வனிதா விஜயகுமார். அவ்வப்போது அப்பா விஜயகுமாருடன் ஏற்பட்ட சண்டைகள், அது குறித்த கருத்துக்கள் என பெரிய சர்ச்சை உருவானது. அதற்குப் பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராகச் சென்றார்.

பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் இவரது கோபம் மற்றும் செயல்பாடுகள் அனைத்துமே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், இவருடைய 2 குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன், இவர் மீதான பார்வை முழுமையாக மாறியது. இரண்டு குழந்தைகளுக்காக இவர் தனது வாழ்க்கையை எந்தளவுக்கு தியாகம் செய்துள்ளார் என்று விவரிக்க பலரும் இவருக்கு நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள்.

பின்பு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். தனது சமையல் திறமையால் வெற்றியாளரானார். அதனைத் தொடர்ந்து இவருடைய சமையலுக்குப் பலரும் ரசிகைகளாக மாறினார்கள். இதனால் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி, சமையல் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

தற்போது வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. தனது அம்மா குறித்து ஜோவிகா கூறியிருப்பதாவது:

"ஒரு அற்புதமான வாழ்க்கையைக் கொடுத்தமைக்காக நான் என் அம்மாவுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்க வேண்டும். நான் அவருக்கு போதுமான நன்றியைச் செலுத்தவில்லை. நான் அவரை அதிகமாக நேசிக்கிறேன். நான் அனைவருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன், உங்கள் தாயை நம்பி அவர்கள் சொல்வதைக் கேளுங்கள், உங்களுக்கு எது நல்லதென்று அவருக்கு தெரியும், அவரை குறைத்து எடை போடாதீர்கள்.

வெறுப்பவர்கள் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். ஏனெனில் நான் அம்மாவுக்கு உறுதுணையாக இருந்து அவரை உயர்த்த போகிறேன். அப்படித்தான் எல்லா குழந்தைகளும் தங்கள் தாய்க்கு செய்யவேண்டும். அம்மா கவலைப்பட வேண்டாம்.

ஏனென்றால் என்ன நடந்தாலும் நான் உங்களோடு இருந்து உங்களின் உயர்வுக்கு உதவுவேன். வாழ்க்கையில் நீங்கள் ஏற்கெனவே மிகப்பெரிய உயரங்களை நீங்களே அடைந்து வீட்டீர்கள், நான் அதை பார்த்திருக்கிறேன். வாழ்க்கை ஒரு சுத்தியல் போலவும் நீங்கள் ஒரு இரும்பு போலவும் உங்கள் கஷ்டங்களை நான் உங்கள் பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன். எப்போதும் போல வலிமையுடன், ஒரு போராளியைப் போல இருப்பீர்கள். நாங்கள் உங்களுடைய போர்வாளாக இருந்து சண்டையிடுவேன்"

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x