Published : 15 May 2020 10:21 PM
Last Updated : 15 May 2020 10:21 PM

தீபாவளிக்கு வெளியாகிறது மாஸ்டர்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், தற்போது 'மாஸ்டர்' பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் கைப்பற்றியுள்ளார்.

இன்னும் 15 நாட்களுக்குள் 'மாஸ்டர்' படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் முடிந்துவிடும். ஆனால் தயாரிப்பு தரப்போ முதல் பிரதியை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஏனென்றால் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது தெரியாமல் உள்ளது. அப்படித் திறந்தாலுமே பல்வேறு நடைமுறைகளை தமிழக அரசு பின்பற்றச் சொல்லி அறிவுறுத்தும். இதனால் மக்கள் திரையரங்குகளுக்குக் கூட்டமாக வருவார்களா என்பது கேள்விக்குறி தான்.

இதனாலேயே, 'மாஸ்டர்' படத்தை தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. இப்போதைக்கு எந்தவொரு அப்டேட், டீஸர், ட்ரெய்லர் உள்ளிட்டவை வேண்டாம் எனவும் முடிவு செய்திருக்கிறார்கள். விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி புதிதாக ஒரு போஸ்டர் மட்டும் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளனர்.

'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், தினா, ரம்யா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வெளியாவதற்குள், கண்டிப்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தை விஜய் தொடங்கிவிடுவார் என்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x