

கடந்த மே 10 அன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளம் முழுக்க திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய அம்மாவின் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
அந்த வரிசையில் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்திருந்தார். நயன்தாரா கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விக்னேஷ் சிவன் "எதிர்காலத்தில் எனக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளின் அம்மாவின் கைகளில் இருக்கும் குழந்தையின் அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த பதிவில் ரசிகர் ஒருவர் விக்னேஷ் சிவனைக் குறிப்பிட்டு மரியாதை குறைவாக பின்னூட்டம் செய்திருந்தார். ரசிகரின் அந்த பின்னூட்டத்துக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் கூறியுள்ளதாவது:
நான் என் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டேன் ப்ரோ. உங்கள் தாய்க்கும் அன்னையர் தின வாழ்த்துகள். உங்களைப் போன்ற அன்பான இதயத்தையும், நல்ல பண்புகளையும் கொண்ட ஒரு நல்ல மனிதரை அவர் பெற்றெடுத்திருக்கிறார். கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்.
இவ்வாறு விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
அந்த ரசிகரின் மரியாதை குறைவான அந்த பின்னூட்டத்துக்கு விக்னேஷ் சிவன் கூறிய பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.