Published : 14 May 2020 08:24 PM
Last Updated : 14 May 2020 08:24 PM

விமர்சனத்தில் வேறு இயக்குநரின் பெயர்: தயாரிப்பாளர்களின் சதி என இயக்குநர் காட்டம்

'நான்சென்ஸ்' என்ற படத்தின் விமர்சனங்களில் வேறொரு இயக்குநரின் பெயர் இருப்பது குறித்து, தயாரிப்புத் தரப்பைச் சாடியுள்ளார் இயக்குநர்.

2018 ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படம் 'நான்சென்ஸ்'. இதன் இயக்குநர் எம்.சி.ஜிதினுக்கு இது முதல் படம். சமீபத்தில் இந்தப் படம் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியானது. ஆனால் இந்தப் படம் பற்றிப் பேசியவர்களின் விமர்சனப் பதிவுகளில் இயக்குநர் என ஜிதின் பெயர் இல்லாமல் வேறொருவர் பெயர் இருந்தது.

இதைப் பார்த்த ஜிதின் தனது படம் பற்றி கூகுளில் தேடும்போது அவரது பெயரும், படத்தின் நாயகன் ரினோஷ் ஜார்ஜின் பெயரும் எங்கும் இடம்பெறவில்லை என்பது தெரிந்தது.

இயக்குநர் என்று குறிப்பிடப்படும் சங்கீத் சிவனை ஜிதின் அழைத்துப் பேசியிருக்கிறார். சங்கீத் சிவனுக்கு இது ஆச்சரியத்தைத் தந்துள்ளது. தயாரிப்பு தரப்பைச் சேர்ந்த யாரோ ஒருவர் இதை வேண்டுமென்றே செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார் ஜிதின்.

"எந்த இயக்குநருக்கும் இப்படி அவர்கள் இயக்கிய படத்தில் அவர்களின் பெயர் இடம்பெறப் போராட வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. படப்பிடிப்பு ஆரம்பித்த நாளிலிருந்தே தயாரிப்புத் தரப்பிலிருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை. படம் வெளியாகும்போது சரியாக விளம்பரம் செய்யவில்லை. இதனால் படம் ஒரு வாரத்தில் காணாமல் போனது.

ஆனால், ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியானது படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன. இதை அவர்கள் கவனித்து எனக்குப் பாராட்டு வந்துவிடக்கூடாது என்று பெயரை மாற்றியிருப்பார்கள். தயாரிப்பு நிறுவனம் எனது அழைப்புகளை எடுக்கவில்லை" என்று ஆதங்கத்துடன் கூறுகிறார் ஜிதின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x