Published : 08 May 2020 11:02 AM
Last Updated : 08 May 2020 11:02 AM

பிளாஸ்டிக்கின் தீமை குறித்து என் குழந்தைகளுக்கு உணர்த்துகிறேன்: கரண் ஜோஹர்

பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹர், நேஹா தூபியா, சோஹா அலிகான், இஷா தியோல், துஷார் கபூர், அம்ரிதா அரோரா ஆகியோர் ஒரு இணையதளம் மூலமாக புவிப் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் வளர்ப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புவிப் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் வளர்ப்பு குறித்து இயக்குநர் கரண் ஜோஹர் கூறியிருப்பதாவது:

''நாம் அனைவரும் மிகவும் பெருமிதம் கொள்ளத்தக்க பெற்றோர்கள். நம் குழந்தைகளை நாம் நேசிக்கிறோம். நாம் அவர்களுக்கு முழுமையாக நமது அன்பையும் பராமரிப்பையும் வழங்குகிறோம். அவர்களது குடும்பத்தை நேசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறோம். வீடுதான் அன்பு வாழும் இடம் என்று அவர்களை உணர வைக்கிறோம்.

ஆனால் சில நேரங்களில், வீடு என்பது அவர்களுக்கு ஒரு இருப்பிடம் மட்டுமே என்பது போல நடந்து கொள்கிறோம். ஆனால் அது உண்மையில்லை. இந்த பூமியும் நமக்கு ஒரு வீடுதான். சிறுவயது முதலே என் குழந்தைகளுக்கு உணர்வுரீதியாக ஊக்கப்படுத்துவதைத் தவிர்த்து அவர்கள் ஒரே மாதிரியான விஷயங்களில் விழுந்துவிடாமல் இருக்கிறார்களா என்று எப்போதும் உறுதி செய்கிறேன்.

அவர்களிடம் நான் எப்போது சொல்லும் இன்னொரு விஷயம், பிளாஸ்டிக். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாமல் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்களுக்கு உணர்த்தி வருகிறேன். அது நம் கிரகத்துக்கு மிகப்பெரிய கேடு விளைவிக்க கூடியதாகும். அதனிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எனவே பிளாஸ்டிக் வேண்டாம் என்பது குறித்து எப்போதும் அவர்களுக்குச் சொல்லி வருகிறேன்''.

இவ்வாறு கரண் ஜோஹர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x