நீடித்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்த ஆமிர் கான்

நீடித்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்த ஆமிர் கான்
Updated on
1 min read

தன்னைப் பற்றி தொடர்ச்சியாக நீடித்து வந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார் ஆமிர் கான்.

டெல்லியில் கரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாழும் பகுதிக்கு ஒரு ட்ரக் வந்துள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவுப் பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டு, தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதை வாங்கிச் சென்றவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஒவ்வொரு பாக்கெட்டிலும் ரூ.15,000 பணம் இருந்துள்ளது.

இது மொத்தமுமே நடிகர் ஆமிர் கானின் திட்டம்தான் என்று ஒருவர் வீடியோவில் பேசியது வைரலானது. உண்மையிலேயே தேவை இருப்பவர்கள் மட்டும்தான் ஒரு கிலோ பொட்டலங்களை வாங்குவார்கள் என்பதால்தான் ஆமிர் இப்படிச் செய்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆமிர் கான் எப்போதுமே தான் செய்யும் உதவியை வெளியே சொல்வதில்லை என்பதால் பலரும் இதை உண்மை என்று நம்பி ஆமிர்கானுக்கு வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கினார்கள். இது தொடர்பாக ஆமிர் கான் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மக்களே, கோதுமைப் பொட்டலங்களில் பணத்தை வைத்தவன் நான் இல்லை. அது முழுவதும் பொய்யான செய்தி அல்லது ஏதோ ஒரு ராபின்ஹூட் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. பாதுகாப்புடன் இருங்கள்".

இவ்வாறு ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in