Published : 30 Apr 2020 12:24 PM
Last Updated : 30 Apr 2020 12:24 PM
இன்று ஒரு சகாப்தம் மறைந்துவிட்டார் என்று ரிஷி கபூர் மறைவு குறித்து விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே புற்றுநோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்தார் ரிஷி கபூர். நேற்று (ஏப்ரல் 29) அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இன்று (ஏப்ரல் 30) காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ரிஷி கபூருக்கு வயது 67. இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார். இவரது மறைவு இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷி கபூரின் மறைவு தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்துள்ள இரங்கல் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
"இது உண்மையல்ல, இதை நம்பமுடியவில்லை. நேற்று இர்ஃபான் கான், இன்று ரிஷி கபூர். இன்று ஒரு சகாப்தம் மறைந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது. அவர் குடும்பத்துக்கு என் இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்".
இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.
This is unreal and unbelievable. Yesterday Irrfan Khan and today Rishi Kapoor ji. It's hard to accept this as a legend passes away today. My condolences to the family and may his soul rest in peace
— Virat Kohli (@imVkohli) April 30, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT