அவரை புன்னகையுடன் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், கண்ணீருடன் அல்ல: ரிஷி கபூர் குடும்பத்தினர் வேண்டுகோள்

அவரை புன்னகையுடன் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், கண்ணீருடன் அல்ல: ரிஷி கபூர் குடும்பத்தினர் வேண்டுகோள்
Updated on
1 min read

ரிஷி கபூர் மறைவு தொடர்பாக அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே புற்று நோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்தார் ரிஷி கபூர். நேற்று (ஏப்ரல் 29) அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இன்று (ஏப்ரல் 30) காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ரிஷி கபூருக்கு வயது 67. இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார்.இவரது மறைவு இந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷி கபூர் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

"லுகேமியா (இரத்தப் புற்றுநோய்) உடன் இரண்டு வருட போராட்டத்துக்குப் பின் இன்று காலை 8.45 அளவில் எங்கள் அன்பார்ந்த ரிஷி கபூர் காலமானார். கடைசி வரை தங்களுக்குப் பொழுதுபோக்கு தந்ததாக மருத்துவர்களும், செவிலியர்களும் கூறினர்.

இரண்டு கண்டங்களுக்குப் பயணப்பட்டு இரண்டு வருடங்களாகச் சிகிச்சையிலிருந்த போதும், அவர் என்றும் இயல்பாக, வாழ்க்கையை முழுமையாக வாழும் தீர்மானத்துடன் இருந்தார். குடும்பம், நண்பர்கள், உணவு மற்றும் திரைப்படங்களில் அவரது கவனம் தொடர்ந்து இருந்தது. இந்த சமயத்தில் அவரை சந்தித்தவர்கள் அனைவருமே, எப்படி அவரது நோய் அவரை பாதிக்காத வகையில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

உலகம் முழுவதிலுமிருந்து அவரது ரசிகர்கள் அவர் மீது காட்டிய அன்புக்கு அவர் நன்றியுடன் இருந்தார். அவரது இந்த மறைவுக்குப் பிறகு, அவரை புன்னகையுடன் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், கண்ணீருடன் அல்ல என்பதை அந்த ரசிகர்கள் அனைவரும் புரிந்து கொள்வார்கள்.

எங்களுக்குத் தனிப்பட்ட இழப்பு ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த உலகமே கடினமான சூழலில் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். பொதுவில் மக்கள் கூட, செல்ல நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை மதிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள், நல விரும்பிகள், குடும்ப நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்"

இவ்வாறு ரிஷி கபூர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in