திருமணம் செய்ததை உறுதி செய்த மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ்

திருமணம் செய்ததை உறுதி செய்த மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ்
Updated on
1 min read

திருமணம் ஆனதை தனது சமூக வலைதளங்களில் உறுதி செய்துள்ளார் நடிகர் செம்பன் வினோத்

பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ். எலும்பு முறிவு நிபுணரான இவர் நடிப்பின் மீதான் ஆர்வத்தால் மலையாள திரையுலகில் நுழைந்தார்.

2010ஆம் ஆண்டு வெளியான் ‘நாயகன்’ படத்தில் வில்லனாக அறிமுகமான இவர் மலையாளம், தமிழ் உட்பட இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 'ஆமென்', 'ஐயோபிண்டே புஸ்தகம்', 'கோஹினூர்' உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

2018ஆம் ஆண்டு வெளியான 'ஈ மா யூ' படத்தில் நடித்ததன் மூலம் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார்.

இந்நிலையில் தனக்கு இரண்டாவது திருமணம் ஆனதை தனது சமூக வலைதளங்களில் உறுதி செய்துள்ளார் செம்பன் வினோத். கோட்டயம் பகுதியைச் சேர்ந்த மனநல மருத்துவரான மரியம் தாமஸை செம்பன் வினோத் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

செம்பன் வினோத் ஏற்கெனவே திருமணாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஜான் க்றிஸ் செம்பன் என்ற ஒரு மகனும் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in