உடல்நலம் குன்றியதால் நடிகர் இர்ஃபான் கான் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலம் குன்றியதால் நடிகர் இர்ஃபான் கான் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

உடல்நலம் குன்றியதால் நடிகர் இர்ஃபான் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இர்ஃபான் கான் சிகிச்சை பெற்று வருகிறார்.

எதிர்பாராத விதமாக இர்ஃபான் கானின் உடல்நலம் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. அவசர சிகிச்சைப் பிரிவில் இர்ஃபான் கான் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது மனைவி சுதபா சிக்தர் மற்றும் அவரது இரண்டு மகன்களும் உடன் இருக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை அன்றுதான் இர்ஃபான் கானின் தாயார் சயீதா பேகம் ஜெய்ப்பூரில் காலமானார். ஊரடங்கு அமலில் இருப்பதால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. வீடியோ கால் மூலமாக தனது அம்மாவுக்கான மரியாதையை இர்ஃபான் கான் செலுத்தினார்.

இர்ஃபான் கான் கடந்த சில வருடங்களாகவே புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார். அப்படி பிரிட்டனில் சிகிச்சையிலிருக்கும்போது அவர் நடித்த 'அங்க்ரேஸி மீடியம்' திரைப்படம் ஊரடங்குக்கு முன் கடைசியாக வெளியானது. ஒரு நாள் மட்டுமே ஓடியது.

அதன் பின் ஊரடங்கால் அனைத்து அரங்கங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து ஓடிடி தளத்தில் படம் வெளியானது. தனது உடல்நலம் சரியில்லை என்ற காரணத்தால்தான் 'அங்க்ரேஸி மீடியம்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்விலும் இர்ஃபான் கலந்துகொள்ளவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in