Last Updated : 25 Apr, 2020 11:23 AM

 

Published : 25 Apr 2020 11:23 AM
Last Updated : 25 Apr 2020 11:23 AM

தொடரும் கரோனா அச்சுறுத்தல்: ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களின் ரிலீஸ் தள்ளிவைப்பு

கரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வராத நிலையில் ‘மிஷன் இம்பாசிபிள்' படங்களின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மிஷன் இம்பாசிபிள்’. இப்பட வரிசையில் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘மிஷன் இம்பாசிபிள்: ஃபால்அவுட்’ திரைப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்படத்தை கிறிஸ்டோபர் மெக்குயரியிடமே அடுத்த இரண்டு பாகங்களை இயக்கும் பொறுப்பை பாராமவுண்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்குள் ‘மிஷன் இம்பாசிபிள்’ அடுத்த இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் முடித்து 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி 7 ஆம் பாகத்தையும், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி எட்டாம் பாகத்தையும் வெளியிட பாராமவுண்ட் நிறுவனம் முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடங்கவிருந்த ‘மிஷன் இம்பாசிபிள் 7’ படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனால் குறிப்பிட்ட தேதிகளில் இந்த இரண்டு படங்களையும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாராமவுண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் ‘மிஷன் இம்பாசிபிள் 7’ 2021 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியும், ‘மிஷன் இம்பாசிபிள் 8’ 2022 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதியும் வெளியாகும் என்று பாராமவுண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘மிஷன் இம்பாசிபிள்’ படங்கள் தவிர்த்து கிறிஸ் ப்ராட் நடிப்பில் உருவாகிவரும் ‘தி டுமாரோ வேர்ல்ட்’, அனிமேஷன் படமான ‘பா பேட்ரோல்’, ‘டன்ஜன்ஸ் அன்ட் டிராகன்ஸ்’ ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டையும் பாராமவுண்ட் நிறுவனம் தள்ளிவைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x