Published : 24 Apr 2020 03:22 PM
Last Updated : 24 Apr 2020 03:22 PM

'அடங்க மறு' இயக்குநர் இயக்கத்தில் விஷால்

'அடங்க மறு' இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ளது உறுதியானது.

ஜெயம் ரவி, ராஷி கண்ணா, பொன்வண்ணன், சம்பத் ராஜ், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான படம் 'அடங்க மறு'. அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் கார்த்திக் தங்கவேல். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் என்பதால், இந்தப் படத்தில் கார்த்தி நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், 'பொன்னியின் செல்வன்', 'சுல்தான்' என கார்த்தி பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கார்த்திக்காக தயார் செய்து வைத்திருந்த கதையை வேறு நாயகர்களை வைத்து இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார் கார்த்திக் தங்கவேல். ஆகையால், இந்தப் படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க முன்வந்துள்ளார். ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் நடிக்க விஷால் முன்பே சம்மதம் தெரிவித்திருந்தார்.

தற்போது 'அடங்க மறு' இயக்குநரின் படம் என்று விஷாலிடம் சொல்ல, அவரோ கதையே கேட்காமல் உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனால் விஷால் - கார்த்திக் தங்கவேல் - ஃபைவ் ஸ்டார் கதிரேசன் கூட்டணி உறுதியானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x