Published : 22 Apr 2020 01:42 PM
Last Updated : 22 Apr 2020 01:42 PM

சாப்பிடுங்கள்; அவற்றைக் காட்சிப்படுத்தாதீர்கள்: குஷ்பு வேண்டுகோள்

சாப்பிடுங்கள்; அவற்றைக் காட்சிப்படுத்தாதீர்கள் என்று தனது ட்விட்டர் பதிவில் குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். திரையுலகப் பிரபலங்கள் சார்பில் பொதுமக்கள் மத்தியில் கரோனா விழிப்புணர்வுக்காக வீடியோக்கள், குறும்படங்கள், பாடல்கள் என வெளியிட்டு வருகிறார்கள்.

சில திரையுலகப் பிரபலங்கள், வீட்டில் சமைப்பதை படங்கள், வீடியோக்கள் எடுத்தும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தார்கள். இந்த ஊரடங்கில் பலரும் உணவின்றித் தவித்து வரும் வேளையில் இது தேவையா என்று பலரும் இணையத்தில் கருத்துகள் வெளியிட்டு வந்தனர்.

தற்போது இது தொடர்பாக குஷ்புவும் வேண்டுகோள் விடுத்து ட்வீட் செய்துள்ளார். சமைப்பது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் குஷ்பு கூறியிருப்பதாவது:

"தாங்கள் சமைத்ததாகக் கவர்ச்சிகரமான உணவின் புகைப்படங்களைப் பலரும் பதிவிடுவதைப் பார்க்கிறேன். நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், நம் வீட்டில் உணவு சமைக்கப்படுகிறது. இந்தக் கொடுமையான சூழலில் ஒரு வேளை உணவுக்குப் பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சிறிது ஒத்துழைப்பை வழங்குவோம். சாப்பிடுங்கள். ஆனால், அவற்றைக் காட்சிப்படுத்தாதீர்கள்".

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x