Published : 14 Apr 2020 11:29 AM
Last Updated : 14 Apr 2020 11:29 AM

உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே அம்பேத்கருக்கு செய்யும் மரியாதை: கமல்

அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை என்னவாக இருக்கும் என்பதை கமல் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், இன்று (ஏப்ரல் 14) அம்பேத்கரின் 129-வது பிறந்த நாளாகும்.

இதற்காக அரசியல் கட்சியினர் பலரும் அவரது கோட்பாடுகளை நினைவுகூர்ந்து வருகிறார்கள். மேலும் தங்களுடைய கட்சி அலுவலகத்தில் சமூக விலகலைக் கடைப்பிடித்து, அம்பேத்கரின் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தியத் திருநாடு, யாரையும் மதத்தாலோ, இனத்தாலோ, மொழியாலோ, தொழிலாலோ, பாகுபாடு பாராது, அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற இவரது கனவு தான் அரசியல் சட்டமாகி, தனி மனித உரிமைகளின் கேடயம் என நிற்கிறது. அண்ணல் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை, உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே"

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x