Last Updated : 03 Apr, 2020 04:45 PM

 

Published : 03 Apr 2020 04:45 PM
Last Updated : 03 Apr 2020 04:45 PM

ஏழைகள் பசியாற நிவாரண நிதி திரட்ட ஆரம்பித்த லியார்னடோ டி காப்ரியோ

ஏழைகள் பசியாறுவதற்காக நிவாரண நிதி திரட்டத் தொடங்கியுள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னடோ டி காப்ரியோ.

அமெரிக்கா உணவு நிதி என்ற முன்னெடுப்பை நடிகர் லியார்னடோ டி காப்ரியோ ஆரம்பித்துள்ளார். இது அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவுவதற்கான நிவாரணமாகும்.

லியோவுடன் சமூக ஆர்வலர் லாரன்ஸ் பவெல் ஜாப் மற்றும் ஆப்பிள் நிறுவனமும் இந்த முன்னெடுப்பில் இணைந்துள்ளது. ஆப்பிள் இதில் இணைவது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்கும், சமூக ஆர்வலர் லாரன்ஸ் பவெலும் ட்விட்டரில் உறுதி செய்துள்ளனர்.

இந்த முயற்சி, பசியில் வாடும் மக்களுக்கு உதவும் ஃபீடிங் அமெரிக்கா போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு தருவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.

"இக்கட்டான சூழலில் WCKitchen மற்றும் FeedingAmerica போன்ற அமைப்புகள், வற்றிய மக்களின் பசியைப் போக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டு எங்களுக்கு உந்துதலாக இருந்துள்ளன. இன்று, இவர்களின் முயற்சிகளை ஆதரிக்க, அமெரிக்கா உணவு நிதியைத் (#AmericasFoodFund) தொடங்குகிறோம்" என்று டி காப்ரியோ ட்வீட் செய்துள்ளார்

டி காப்ரியோ இதைத் தொடங்கியவுடனேயே பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தனர். பாடகி லேடி காகா, தான் அந்த முன்னெடுப்புக்கு நிதி வழங்கவுள்ளதாகப் பகிர்ந்துள்ளார். தொலைக்காட்சி பிரபலம் ஓப்ரா வின்ஃப்ரே ஒரு மில்லியன் டாலர்களைக் கொடுத்துள்ளார்.

இந்த நிதி குழந்தைகள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு உணவு தரவும், இந்தக் கடினமான காலகட்டத்தில் உதவி தேவைப்படும் அனைவருக்கும் உதவிடப் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

— Leonardo DiCaprio (@LeoDiCaprio) April 2, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x