தனிமரம் தோப்பாகும் என்பதை நிரூபித்தவர் விசு: பார்த்திபன் புகழாஞ்சலி

தனிமரம் தோப்பாகும் என்பதை நிரூபித்தவர் விசு: பார்த்திபன் புகழாஞ்சலி
Updated on
1 min read

தனிமரம் தோப்பாகும் என்பதை நிரூபித்தவர் விசு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவரும், பல படங்களுக்கு கதாசிரியராக பணிபுரிந்த விசு நேற்று (மார்ச் 22) மாலை காலமானார். அவருக்கு வயது 74. அவரது இறுதிச்சடங்கு இன்று (மார்ச் 23) மாலை நடைபெறவுள்ளது. விசுவின் மறைவு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

விசுவின் மறைவு குறித்து நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"விசு சார் RIP-தனிமரம் தோப்பாகும் என்பதை நிரூபித்தவர். தனக்கென ஒரு பாணியும் அதில் வெற்றியும் பெற்றவர். “உங்கள் மாமனாரைக் கேட்டுப்பாருங்கள்”என்ற வீடியோவை 10 தடவை பார்த்திருப்பேன். அடிக்கோடிட்ட வாதம். மரணத்திற்கு முன்பான சாதனையே மனதோடு ஒட்டிக்கொள்வது அப்படிப்பட்டது விசு சாரின் வாழ்க்கை"

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in