

கரோனா பீதியால் உலகமே ஸ்தம்பித்துள்ள வேளையில் மூத்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் நையாண்டியான கருத்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அந்த ட்வீட்டில், "சில கபூர்களுக்கு எதிராகக் காலம் திரும்பியிருக்கிறது. நான் அச்சப்படுகிறேன். ஓ கடவுளே மற்ற கபூர்களைக் காப்பாற்று என்று உன்னை வேண்டுகிறேன். நாங்கள் இனி எந்தப் பாவங்களும் செய்யக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்வீட் சமீபத்தில் செய்திகளில் அடிபடும் யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூர் மற்றும் பாடகி கனிகா கபூரைக் குறிப்பிட்டே பதிவிடப்பட்டுள்ளது. இந்த ட்வீட்டுடன் இவர்களின் புகைப்படங்களையும் பகிர்ந்தே கிண்டலடித்துள்ளார் ரிஷி கபூர்.
யெஸ் வங்கி பிரச்சினையில் ரானா கபூர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த கனிகா கபூருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் பொறுப்பற்ற முறையில் அவர் விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளதால் தற்போது பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்குக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.