

சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் - 19 வைரஸ் காய்ச்சல், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் 1,83,055 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். இதுவரை 7,415 பேர் உயிரிழந் துள்ளனர். இதில் மிக அதிகபட்சமாக சீனாவில் 3226, இத்தாலியில் 2158, ஈரானில் 988, ஸ்பெயினில் 491 பேர் இறந்துள்ளனர்.
இதன் காரணமாக, கோவிட் - 19 வைரஸை ‘உலகளாவிய நோய்த் தொற்று' என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியீஸஸ் கடந்த மார்ச் 13ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய சவால் ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். அதன் பெயர் ‘பாதுகாப்பான கைகள் சவால்’(சேஃப் ஹேண்ட்ஸ் சேலஞ்ச்). அதில் பங்கேற்பவர் தனது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவி அதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பகிர வேண்டும். இந்த சவாலில் பங்கேற்க பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா மற்றும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்க்வார்ஸ்னேக்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார் டெட்ரோஸ் .
இதனைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன் அந்த சவாலை ஏற்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (17.03.20) அறிவித்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு தீபிகா கூறியிருப்பதாவது:
சேஃப் ஹேண்ட்ஸ் சவாலில் பங்கேற்க என்னை அழைத்த டெட்ரோஸ் அதனொமுக்கு நன்றி. நிச்சயமாக கோவிட் 19 வைரஸ் உடல்நலத்துக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல். ஆனால் இந்த போரில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது. இந்த சவாலில் பங்கேற்க ரோஜர் ஃபெடரர், விராட் கோலி, கிறிஸ்டியானா ரொனால்டோ ஆகியோரை அழைக்கிறேன்.
இவ்வாறு தீபிகா கூறியுள்ளார்.
இந்த சேஃப் ஹேண்ட்ஸ் சவால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.