Published : 15 Mar 2020 10:09 PM
Last Updated : 15 Mar 2020 10:09 PM

நண்பர் அஜித் போல் கோட் சூட் அணிந்து வந்தேன்: விஜய்

நண்பர் அஜித் போல் கோட் சூட் அணிந்து வந்தேன் என்று 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் பதிலளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இன்று (பிப்ரவரி 15) இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கு பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என யாருக்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை. 'மாஸ்டர்' படக்குழுவினர் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் கோர்ட் ஷுட் எல்லாம் அணிந்து வந்திருந்தார் விஜய். இதைப் பலருமே ஆச்சரியமாகப் பார்த்தார்கள். மேலும், அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

’மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி முடிந்தவுடன், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாவனா மற்றும் ஆர்.ஜே.விஜய் இருவரும் விஜய்யிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள். அதில் கோட் சூட் குறித்த கேள்விக்கு விஜய், "ஒவ்வொரு விழாவுக்கும் ரொம்ப சுமாராக உடையணிந்து சொல்கிறீர்கள் என காஸ்ட்டியூமர் பல்லவி இந்தக் கோட் கொடுத்தாங்க. சரி, நம்மளும் நண்பர் அஜித் மாதிரி கோட் போட்டுப் போவோம் என்று வந்தேன். நன்றாக இருக்கிறதா?" என்று பதிலளித்தார் விஜய்.

விஜய்யின் இந்த பதிலைச் சற்று எதிர்பாராத அரங்கிலிருந்தவர்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவாரம் அடங்க சில மணித்துளிகள் பிடித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x