Published : 15 Mar 2020 05:20 PM
Last Updated : 15 Mar 2020 05:20 PM

தமிழில் ரீமேக்காகிறது அய்யப்பனும் கோஷியும்

மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' படம் தமிழில் ரீமேக்காகவுள்ளது.

பிப்ரவரி 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் 'அய்யப்பனும் கோஷியும்'. திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்துள்ள இந்தப் படத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றப் பலரும் போட்டியிட்டனர். இறுதியாக 'ஜிகர்தண்டா', 'ஆடுகளம்' படத்தின் தயாரிப்பாளரான பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதனை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் 'அய்யப்பனும் கோஷியும்' படக்குழு உறுதி செய்துள்ளது.

இந்த ரீமேக்கில் யார் நடிக்கவுள்ளார்கள், யார் இயக்குநர் உள்ளிட்ட எதுவுமே இன்னும் முடிவாகவில்லை. இப்போதை யாரை இயக்கவைக்கலாம் என்ற ஆலோசனை மட்டும் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x