Published : 14 Mar 2020 07:17 PM
Last Updated : 14 Mar 2020 07:17 PM

ரஜினியின் அரசியல் பேச்சுக்கு அதிகரித்த கிண்டல்: கலை இயக்குநர் காட்டம்

ரஜினியின் அரசியல் பேச்சுக்கு அதிகரித்த கிண்டல் தொடர்பாக, கலை இயக்குநர் கிரண் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

மார்ச் 12-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அந்தச் சந்திப்பில் அரசியல் மாற்றத்துக்காக வைத்துள்ள 3 திட்டங்கள், அரசியல் பார்வை, எப்போது அரசியல் வருகை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்தச் சந்திப்பில் அரசியலுக்கு எப்போது வருவேன் என்பதை ரஜினி தெளிவுபடுத்தவில்லை. மேலும், "மக்களிடம் எழுச்சி ஏற்பட்டவுடன் நான் வருவேன்" என்று மறைமுகமாகத் தெரிவித்தார். ரஜினியின் இந்தப் பேச்சை வைத்து சமூக வலைதளத்தில் கிண்டல் பதிவுகளும், மீம்ஸ்களும் அதிகரித்தன.

இந்தக் கிண்டல்களுக்கு கலை இயக்குநர் கிரண் தனது ட்விட்டர் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், "இவர் சொல்கிற மாதிரி நடந்துவிட்டால் தொகுதி கவுன்சிலர், வட்டம், மாவட்டம் ஆகியோரின் கொட்டம் இருக்காதா? அவர் வரட்டும்...வராமல் போகட்டும். இது நடந்தால் கூட போதும். கொள்ளைக் கும்பல் குறைந்தாலே, நாடு சிறிது உருப்படும். ஒரு கவுன்சிலர், தொகுதி, வட்டம், மாவட்டங்களின் சொத்துகளைச் சோதனை போட்டாலே போதும். இந்த உண்மை புரியும்.

90 வயது வரை பதவியிலிருந்தவரைக் கேலி செய்த இந்த மண்ணில் '70 வயசு ஆயிடுச்சி, உடம்புல பல பஞ்சர் எனக்கு ஏன்? பதவி, புதியவர்கள் வரட்டும், நான் வழி நடத்துகிறேன்” என்று நேர்மையாகச் சொன்னாலும் கிண்டல் என்றால்... யார்தான் வேண்டும் ஆட்சி செய்ய?” என்று பதிவிட்டுள்ளார் கிரண்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x