என் திருமண விஷயத்தில் ஏன் இவ்வளவு ஆர்வம்? - அனுஷ்கா காட்டம்

என் திருமண விஷயத்தில் ஏன் இவ்வளவு ஆர்வம்? - அனுஷ்கா காட்டம்

Published on

மக்கள் ஏன் என் திருமண விஷயத்தில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் எனப் புரியவில்லை என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

'அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்' என்ற செய்தி அவ்வப்போது வெளியாகும், உடனே அதற்கு 'இது வதந்தி' என்று மறுப்பு தெரிவிப்பார் அனுஷ்கா. இதுவரை ஆர்யா, பிரபாஸ் என பல பேருடன் அனுஷ்காவுக்குத் திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆர்யாவுக்குத் திருமணமாகிவிட்டது. இன்னும் பிரபாஸுக்குத் திருமணமாகவில்லை.

சில நாட்களுக்கு முன்பு 'சைஸ் ஜீரோ' படத்தின் இயக்குநர் பிரகாஷ் கோவேலமுடியுடன் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கு அனுஷ்கா எந்தவொரு பதிலுமே அளிக்காமல் இருந்தார். இதனால், இது உண்மையாக இருக்குமோ என்று பலரும் கருதினார்கள்.

தற்போது ’சைலன்ஸ்’ படம் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், தனது திருமண வதந்தி தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துள்ளார் அனுஷ்கா. அதில், "மக்கள் ஏன் என் திருமண விஷயத்தில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. அது சரியான தருணத்தில் நடக்கும். நான் எதையும் மறைக்கவும் மாட்டேன். எனக்கான மணமகனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நான் என் பெற்றோரிடமும் ஒப்படைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார் அனுஷ்கா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in