

சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் வீடியோக்களை கொண்ட பதிவுகளை மையமாக வைத்து ‘டிரெண்டிங் 20’ என்ற நிகழ்ச்சியை கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி வெள்ளிதோறும் ஒளிபரப்பி வருகிறது. இதை கிரிஜா தொகுத்து வழங்குகிறார்.
‘‘அரசியல் களம் குறித்த நகைச்சுவை மீம்ஸ், விளையாட்டு போட்டிகள், விநோத செயல்கள் மூலம் உலக அளவில் வரவேற்பு பெறும் மனிதர்கள் போன்ற பதிவுகளை வழங்கும் நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பாகிறது.
வாரம் முழுவதும் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் 20 சுவாரஸ்ய வீடியோக்களை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இது. முன்பெல்லாம் வெள்ளிக்கிழமை என்றாலே ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சி ஞாபகம் வருவதுபோல, எனது ‘டிரெண்டிங் 20’ நிகழ்ச்சியை ‘டிரெண்டிங்’ ஆக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் கிரிஜா.