ஓர் இல்லத்தரசியின் மாற்றம்

‘பாக்யலட்சுமி’ குழுவினர்.
‘பாக்யலட்சுமி’ குழுவினர்.
Updated on
1 min read

குடும்பத்தை தன் உழைப்பால் கட்டிக் காக்கும் ஓர் இல்லத்தரசியின் சொல்லப்படாத வாழ்க்கைக் கதையை கூற வருகிறது விஜய் தொலைக்காட்சியில் வரும் திங்கள்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ள ‘பாக்யலட்சுமி’ தொடர்.

‘‘பரபரப்பான இந்த வாழ்க்கையில், நம் தாய்க்கு சிறு நன்றி கூறக்கூட பலருக்கும் நேரம் இல்லை. அதுபோன்ற ஒரு தாய்தான் ‘பாக்யலட்சுமி’. அவருக்கு கணவர், 3 பிள்ளைகள். மாமனார், மாமியார், மைத்துனர்கள் என எல்லோரும் சேர்ந்து வசிக்கும் கூட்டுக் குடும்பம். குடும்பத்தில் அனைவருக்கும் என்னென்ன தேவை, அவர்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று பார்த்துப் பார்த்து கவனிப்பதுதான் அவரது அன்றாட வேலை. ஆனால், அவரை யாரும் கவனிப்பது இல்லை. அவரது அன்பு, பாசத்தைக்கூட ஒருபொருட்டாகவே அவர்கள் மதிப்பதில்லை. இந்த சூழலில், தனது வாழ்க்கையை புரட்டிப்போடும் சம்பவத்தை எதிர்கொள்கிறார். அதனால் ஒரு முடிவு எடுக்கும் அவர், எப்படி வேறுபட்ட ஆளுமையாக மாறுகிறார் என்று நகரும் கதை. பாக்யலட்சுமியாக சுசித்ரா நடிக்கிறார். சதிஷ், நேஹா உள்ளிட்டோரும் உள்ளனர். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரை இயக்கிய சிவசேகர் இத்தொடரை இயக்குகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in