Published : 28 Feb 2020 12:44 PM
Last Updated : 28 Feb 2020 12:44 PM

கரோனா வைரஸ் பாதிப்பு வதந்தி: ஜாக்கிசான் விளக்கம்

கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வதந்திக்கு, நடிகர் ஜாக்கிசான் விளக்கமளித்துள்ளார்.

சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வருகிறது கரோனா வைரஸ். இந்த வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 2000-க்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். மேலும், தென் கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து பணிபுரிந்து வருகின்றன. இதனிடையே, ஹாங்காங்கில் வசித்து வரும் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சானுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பலரும் செய்தியாக வெளியிடவே, ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் ஜாக்கிசான் நலம் பெற வேண்டித் தகவல் அனுப்பியுள்ளனர்.

இந்த திடீர் பரபரப்பு தொடர்பாக ஜாக்கிசான் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "அனைவருடைய அக்கறைக்கும் நன்றி. நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறேன். தயவுசெய்து கவலைப்பட வேண்டாம். நான் தனிமைப்படுத்தப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Thanks for everybody's concern! I'm safe and sound, and very healthy. Please don't worry, I'm not in quarantine. I hope everyone stays safe and healthy too!

A post shared by Jackie Chan 成龍 (@jackiechan) on

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x