திருமணங்கள் உருவாகும் கதை!

திருமணங்கள் உருவாகும் கதை!
Updated on
1 min read

திருமணத்துக்கு தயாராகும் தம்பதிகளுக்காக ‘திருமணங்கள் உருவாகும் கதை’ என்ற பெயரில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நடிகையும், தொகுப்பாளினியுமான வைஷாலி தணிகா இதை தொகுத்து வழங்குகிறார்.

‘‘எளிமையாக திருமண வரவு - செலவு கணக்கில் தொடங்கி, மண்டபம், மண்டப அலங்காரம், புடவைகள், நகைகள், சமையல் வரை அனைத்து விஷயங்களையும் தனித் தன்மையோடு வழங்குவதுதான் திருமண நிகழ்ச்சியின் சிறப்பு. வரவேற்பு, பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு, மெகந்தி திருவிழா, திருமண வைபவம் என பல நிகழ்வுகள் ஒரு திருமண நிகழ்ச்சியை ஒட்டி அரங்கேறும். திருமணம் செய்துகொள்ள இருக்கும் தம்பதிகள், அவர்களது வீட்டாருக்கு பெரிய குறிப்பேடு போன்ற நிகழ்ச்சியாக இதை வழங்கி வருகிறோம். உடை, கூந்தல், முக அலங்காரம், நகைகள் என பல பரிமாணங்களை அலசி ஆராய்கிறோம். சமீபத்தில்கூட ‘அரண்மனை’, ‘ஏரி’, ‘கிராமம்’ என பல்வேறு மையக் கருத்துகளுடன் கூடிய திருமண வைபவ நிகழ்ச்சியை இதன்மூலம் வழங்கினோம். இதுபோல இன்னும் ஏராளமான அம்சங்கள் வர இருக்கின்றன’’ என்கிறார் தொகுப்பாளினி வைஷாலி தணிகா.
வைஷாலி தணிகா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in