Published : 26 Feb 2020 11:01 am

Updated : 26 Feb 2020 11:01 am

 

Published : 26 Feb 2020 11:01 AM
Last Updated : 26 Feb 2020 11:01 AM

’தலைவி’ பிரச்சினைக்குத் தீர்வு: அஜயன் பாலா தகவல்

thalaivi-issues-sorted-out

'தலைவி' படம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிட்டதாக, எழுத்தாளர் அஜயன் பாலா தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 24-ம் தேதி வெளியிடப்பட்ட 'தலைவி' படத்தின் புதிய போஸ்டரால் சர்ச்சை உருவானது. அதில் தனது பெயர் இடம்பெறவில்லை என்று இயக்குநர் ஏ.எல்.விஜய்யை கடுமையாகச் சாடினார் எழுத்தாளர் அஜயன் பாலா. இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது நினைவு கூரத்தக்கது.


எழுத்தாளர் அஜயன் பாலா வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் வேண்டுகோள் விடுத்ததின் பெயரில் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். (அஜயன் பாலாவின் குற்றச்சாட்டை முழுமையாக வாசிக்க)

தனது பதிவை நீக்கியது ஏன் என்பதற்கு அஜயன் பாலா, "இன்று காலை ’தலைவி’ படப் பிரச்சினை தொடர்பாக முகநூலில் இட்ட பதிவுக்குப் பலரும் ஆதரவும் வருத்தமும் தெரிவித்தனர். அவர்களுக்கும் தொடர்ந்து இது குறித்து அழைப்பு விடுத்துப் பேசும் ஊடக இதழியல் நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்து நாளை நேரில் பேசி தீர்க்க சென்னை வருவதாகவும் உறுதி கூறியதால் பதிவை நீக்கியுள்ளேன். நாளை சந்திப்புக்குப்பின் தொடர்புகொள்கிறேன் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது. இயக்குநர் விஜய் தன்னை சந்தித்துப் பேசியது தொடர்பாக அஜயன் பாலா தனது ஃபேஸ்புக் பதிவில், "நேற்று இரவு நண்பரும் இயக்குநருமான விஜய் இரவு பத்துமணிக்கு வீட்டுக்கு வந்து உதவி இயக்குநரின் கவனக்குறைவால் நடந்துவிட்ட பிசகுக்கு வருத்தம் தெரிவித்தார்.

சரியான அங்கீகாரம் இடம்பெற்ற திருத்தப்பட்ட விளம்பரத்தைக் காண்பித்தார். இன்று ஹைதராபாத்திலிருந்து வரவிருக்கும் தயாரிப்பாளர் விஷ்ணுவுடன் நடத்தவிருக்கும் பேச்சு வார்த்தை மூலம் சம்பளப் பிரச்சினைகள் முடிவை எட்டும் என நம்புகிறேன். இவ்விவரம் தொடர்பாக எனக்கு உடன் நின்ற ஊடக.இதழியல் முகநூல் நண்பர்களுக்கு இதயம் நெகிழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார் அஜயன் பாலா.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'தலைவி' படம் உருவாகிறது. இதில் கங்கணா ரணாவத் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, சசிகலாவாக பூர்ணா, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியாக மதுபாலா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

அன்பு வாசகர்களே....


வரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!



தலைவிதலைவி சர்ச்சைதலைவி பிரச்சினைதலைவி பிரச்சினைக்கு தீர்வுஎழுத்தாளர் அஜயன் பாலாஅஜயன் பாலா சாடல்இயக்குநர் விஜய்இயக்குநர் ஏ.எல்.விஜய்கங்கணா ரணாவத்அரவிந்த்சாமிமதுபாலாபூர்ணா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author