Published : 21 Feb 2020 07:10 PM
Last Updated : 21 Feb 2020 07:10 PM

விஜய் தேவரகொண்டாவுக்கு நாயகியாக அனன்யா பாண்டே ஒப்பந்தம்

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படத்தின் நாயகியாக அனன்யா பாண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் 'வேர்ல்ட் பேமஸ் லவ்வர்'. ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரீன் தெரசா, ராஷி கண்ணா உள்ளிட்டர் நடித்திருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் தேவரகொண்டா.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இந்தப் படத்தை கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், சார்மி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக தற்காப்புக் கலைகள் கற்றுக்கொண்டு, உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார் விஜய் தேவரகொண்டா.

நாயகியே இல்லாமல் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. விரைவில் முன்னணி இந்தி நாயகி ஒப்பந்தமாவார் எனத் தகவல்கள் வெளியாயின. அதன்படி, தற்போது இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு நாயகியாக முன்னணி இந்தித் திரையுலக நாயகியான அனன்யா பாண்டே நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா இந்தியிலும், அனன்யா பாண்டே தமிழ் மற்றும் தெலுங்குடத் திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x