Published : 17 Feb 2020 11:28 AM
Last Updated : 17 Feb 2020 11:28 AM

'டாக்டர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் உருவான 'டாக்டர்' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார்.

இன்று (பிப்ரவரி 17) சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. கையில் ஆபரேஷன் செய்யும் கத்தியுடன் சிவகார்த்திகேயன் சேரில் அமர்ந்திருப்பது போன்று ஃபர்ஸ்ட் லுக்கை வடிவமைத்துள்ளனர். இன்னும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி எதுவும் முடிவாகவில்லை. தற்போது கோவாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். மேலும் வினய், யோகி பாபு, இளவரசு, 'கோலமாவு கோகிலா' டோனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளராக விஜய் கார்த்திக், இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக நிர்மல் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் 'அயலான்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

தவறவிடாதீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x