Published : 05 Feb 2020 07:34 AM
Last Updated : 05 Feb 2020 07:34 AM

திரை விமர்சனம்- நாடோடிகள் 2

வா (சசிகுமார்), செங்கொடி (அஞ்சலி), பாண்டி (பரணி) மூவரும் சமுக அக்கறை மிகுந்த இளைஞர்கள். சாதிக்கு எதி ரான மனநிலையைக் கொண்டிருக் கும் இளைஞர்களை இணைத்து சாதி ஒழிப்புக்கான இயக்கம் தொடங்குகின்றனர். இதனால், ஜீவாவுக்கு யாரும் பெண் தர மறுக்கின்றனர். சொந்த சாதியைச் சேர்ந்த சவும்யாவுடன் (அதுல்யா ரவி) அவருக்கு திருமணம் நடக்கிறது. வேறு சாதிக்காரரை காதலித்த சவும்யா, குடும்பத்தினரின் மிரட்டலுக்கு பயந்தே தன்னை திருமணம் செய்ததை அறிகிறார் ஜீவா. உடனே சவும்யாவின் காதலரைக் கண்டுபிடித்து இருவருக்கும் திரு மணம் செய்துவைத்து, அவர்களை வெளியூருக்கு அனுப்பி வைக்கி றார். இதை அறிந்த சவும்யா குடும் பத்தினரும், அவரது சாதியினரும் தப்பிச் சென்றவர்களை தேடிக் கண்டுபிடித்து ஆணவக் கொலை செய்ய திட்டமிடுகின்றனர். அதை ஜீவா குழுவினர் தடுக்க முடிந்ததா, சாதியற்ற சமூகத்துக்கான அவர்க ளது முயற்சி என்ன ஆனது என்பது கதை.

‘நாடோடிகள்’ வெளியாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி யுள்ள ‘நாடோடிகள்-2’, கால மாற்றத்தை உள்வாங்கி, இன்றைய முக்கிய சமூகப் பிரச்சினைக்கு தீர்வுகளை பரிந்துரைக்க முனைந் திருக்கிறது. குறிப்பாக ஆதிக்க சாதி மனநிலையை சாடுவதும், சாதி எதிர்ப்பை பேசுவதும் காலத் தின் கட்டாயம் என்பதை உணர்த் துகிறது. மக்கள் பிரச்சினைகளுக் காக இளைஞர்கள் குரல் எழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது சமூக அக்கறை யும், சமூகமாற்றத்துக்கு வித்திட முனையும் நோக்கங்களும் இப்படத் தில் அழுத்தமாக வெளிப்பட்டிருப் பதால் இயக்குநர் சமுத்திரக்கனி யைப் பாராட்டலாம். ஆனால், எல்லா கருத்துகளையும் உரக்க வும், பிரச்சாரத் தொனியிலும் சொல் லும் ‘அறிவுரை பாணி’ இதிலும் தீவிரமாக வெளிப்படுகிறது.

ஆதிக்க சாதி மனநிலை, அவற்றை ஊக்குவிக்கும் சக்திகள், அவற்றை இயக்கும் ஓட்டு அரசியல் போன்றவற்றின் சித்தரிப்பு மேம் போக்காக இருக்கின்றன. போராட் டக் குழுக்கள் செயல்படும் விதம், கொஞ்சம்கூட எதார்த்தமாக இல்லை. ஒருசில தருணங்கள் தவிர, போராட்டக் காட்சிகளில் சுவாரஸ் யமோ, நம்பகத்தன்மையோ இல்லை.

இடைவேளையை நெருங்கும் போது படம் சூடுபிடிக்கிறது. சசி குமார் தன் மனைவி பற்றிய உண்மையை அறிந்துகொண்டு உடைந்துபோவதும், பிறகு அதைக் கையாளும் விதமும் முதிர்ச்சியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன. சாதி வெறி யர்களின் தாக்குதல், அவை எதிர் கொள்ளப்படும் விதம், நண்பர் களாக இருந்த சசிகுமார் - அஞ்சலி இடையே காதல் மலரும் அழகான தருணங்கள் என இரண்டாம் பாதி ஓரளவு சுவாரஸ்யமாக நகர்கி றது. ‘நாடோடிகள்’ முதல் பாகத்தை நினைவுபடுத்தும் துரத்தல் காட்சி கள் உற்சாகத்தை மீட்டுவிடுகின் றன. அதுவும், அந்த இரட்டைப் பேருந்து துரத்தல் காட்சியில் ‘சம்போ சிவசம்போ’ பாடலைப் பயன்படுத்தி ரசிகர்களைப் பழைய நினைவுகளின் நாஸ்டால்ஜியாவில் மூழ்கவைத்துவிட்டார்கள்.

காதல் உருவான தருணங்களை சசிகுமார் - அஞ்சலி பகிர்ந்துகொள் ளும் காட்சிகள், சசிகுமாருக்கு ரொமான்ஸ் நடிப்பும் வரும் என்று சொல்கின்றன. ஒரு பெண்ணின் முழு சம்மதத்தை அறியாமலே அவரை திருமணம் செய்துகொண்ட தற்காக சசிகுமாரை அஞ்சலி விமர்சிக்கும் காட்சியில், சசிகுமா ரின் பாலின சமத்துவம் சார்ந்த புரிதல் பாராட்டுக்குரியது.

யாரையும் நம்பாமல் தனித்து இயங்கும் போராளிக்கு தள்ளு வண்டியில் கூழ் விற்கும் மூதாட்டி காசு வாங்காமல் கூழ் கொடுப் பது போன்ற ரசிக்கத்தக்க தருணங் களையும் ஆங்காங்கே இட்டு நிரப்பியிருக்கிறார் இயக்குநர். ஆணவக் கொலை சம்பவக் காட்சி மனதை உலுக்குகிறது.

ஆனாலும், எல்லா சமூகப் பிரச்சினைகளுக்கும் கருத்து சொல்லும் சமுத்திரக்கனியின் முனைப்பு, இயல்பான திரை மொழியை மீறியதாகவும் பிரச் சார உத்தி மீதான போதை கொண்ட தாகவும் இருக்கிறது.

சசிகுமார் நடிப்பில் குறை இல்லை. உணர்ச்சிகரமான காட்சி களில் நடிப்பின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். போராளிப் பெண்ணாக அஞ்சலி சிறப்பாக நடிக்கிறார். பரணி, அதுல்யா ரவி, போராளியாக வரும் இயக்குநர் மூர்த்தி, செல்ஃபி சின்னமணியாக வரும் நமோ நாராயணா, ஞானசம் பந்தம், ஈ.ராமதாஸ் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். சசிகுமாரின் முதிய கூட்டாளியாக வரும் ‘மூத்தவர்’ கவனம் ஈர்க்கிறார்.

ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசை பொருத்தமாக இருக்கிறது. ‘பக பக பக’ என்ற தீம் இசை ரசிக்கவைக்கிறது. ஏகாம் பரத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு தேவையானதை தந்திருக்கிறது.

பிரச்சார நெடி, இயல்புக்கு அப்பாற்பட்ட சித்தரிப்புகள் ஆகிய வற்றை தாண்டி, நல்ல நோக்கத் துக்காகவும், கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் முக்கிய தருணங் களை நாடகமின்றி காட்சிப்படுத் தியதற்காகவும் பாராட்டலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x