Published : 28 Jan 2020 08:28 PM
Last Updated : 28 Jan 2020 08:28 PM

'கருப்பு கண்ணாடி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக இயக்குநர் நியூட்டன்.ஜி இயக்கும் 'கருப்பு கண்ணாடி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணிபுரிந்து வரும் தணிகை நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் நியூட்டன்.ஜி. இதற்கான முதற்கட்டப் பணிகளை நீண்ட காலமாகக் கவனித்து வந்தார். அணி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

தற்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். 'கருப்பு கண்ணாடி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகிறது.

இந்தப் படத்தில் நாயகியாக குவின்ஸி நடிக்கவுள்ளார். மேலும், நடிகர் சரண்ராஜ், கஜராஜ், பாடகர் வேல்முருகன், நடிகை சுபாஷினி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக சம்சாத், இசையமைப்பாளராக சித்தார்த்தா பிரதீப், எடிட்டராக கார்த்திக் ராம் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x