Published : 27 Jan 2020 06:15 PM
Last Updated : 27 Jan 2020 06:15 PM

'மாஸ்டர்' படத்தின் 3-வது போஸ்டர்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

'மாஸ்டர்' படத்தின் 3-வது போஸ்டருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்திலிருந்து விஜய் - விஜய் சேதுபதி இருவருமே இருக்கும் புதிய போஸ்டர் நேற்று (ஜனவரி 26) வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவற்றின் தொகுப்பு இதோ:

அட்லி: வெறித்தனம்

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்: மாஸ்டர் மூன்றாவது போஸ்டர் வேற லெவல். விஜய் சார் மற்றும் விஜய் சேதுபதி அண்ணா. லோகேஷ் நண்பா வாழ்த்துகள். சத்யன் சூர்யன், ஃபிலோமின் ராஜுக்கு வாழ்த்துகள்.

இந்துஜா: ஓ.. எனக்குப் பிடித்த விஜய் சார் மற்றும் விஜய் சேதுபதி சார் இடையே கர்ஜனைகள்.

ரெபா மோனிகா ஜான்: ஆ... நான் இப்போது கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறேன். என்ன ஒரு சக்திவாய்ந்த காட்சி. இரண்டு அற்புதமான நட்சத்திரங்கள். எனக்குப் பிடித்த இருவரும் ஒரே படத்தில்.

அனிருத்: சிறப்பான மோதலுக்குத் தயாராக இருங்கள்

விஜயலட்சுமி: ப்பா.... இந்த இருவரும் ஒரே காட்சியில் சேர்ந்து தோன்றும் போது அதை எந்த அளவு நாம் ரசிப்போம்.

தேவி ஸ்ரீ பிரசாத்: அன்பார்ந்த விஜய் சேதுபதி சார் மற்றும் விஜய் சார். அற்புதமான போஸ்டர். தோற்றம். இயக்குநர் லோகேஷ் அற்புதம். நேற்று நீங்கள் போஸ்டர் பற்றிச் சொன்ன விஷயம் உண்மை. இதைப் பார்க்க காத்திருக்க முடியவில்லை.

வி.ஜே. ரம்யா: ஒரு இதிகாச மோதல். விஜய் - விஜய் சேதுபதி. மரண மாஸ்

நடன இயக்குநர் ஷோபி: மாஸ்டர் மாஸ் மூன்றாவது போஸ்டர். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

இயக்குநர் ரத்னகுமார்: திரை கிழியப் போகுது. ஒவ்வொரு முறையும் தரத்தை உயர்த்திக்கொண்டே இருக்கிறீர்கள் கோபி பிரசன்னா

கதிர்: வேற லெவல் வெறித்தனம். பெரிய திரையில், ஒரே காட்சியில் விஜய்ண்ணா, விஜய் சேதுபதிண்ணா. யப்பா!

சாந்தனு: மாஸ்டர் மூன்றாவது போஸ்டர் கொய்யாலே சூடு புடிக்குது. எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துவிட்டார்கள். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கு?

இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரிக்குள் முடிக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x