Published : 24 Jan 2020 02:42 PM
Last Updated : 24 Jan 2020 02:42 PM

விபத்தில் சிக்கிய சுசீந்திரன்

காலையில் நடைப்பயிற்சியின்போது வாகனம் மோதியதில் சுசீந்திரனின் கை முறிந்தது.

தமிழ்த் திரையுலகில் 'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'பாண்டியநாடு', 'மாவீரன் கிட்டு' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு 'கென்னடி கிளப்' மற்றும் 'சாம்பியன்' ஆகிய படங்கள் வெளியாயின.

தற்போது தனது அடுத்த படத்துக்காகக் கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் சுசீந்திரன். வழக்கம்போல் இன்று காலையில் நடைப்பயிற்சி சென்றார். அப்போது வாகனம் ஒன்று மோதியது. இதில் நிலைகுலைந்தார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். அவருக்கு லேசர் முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது மருத்துவமனையில் ஓய்வில் இருக்கும் சுசீந்திரன், விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரை 3 வாரங்களுக்குத் தொடர் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x