Published : 22 Jan 2020 02:57 PM
Last Updated : 22 Jan 2020 02:57 PM

தமிழில் ரிமேக்காகிறது இஸ்க்

மலையாளத்தில் பெரும் வரவேற்பு பெற்ற 'இஸ்க்' திரைப்படம் தமிழில் ரீமேக்காவது உறுதியாகியுள்ளது.

அனுராஜ் மனோகர் இயக்கத்தில் ஷான் நிகம், அனு ஷீத்தல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மலையாள படம் 'இஸ்க்'. 2019-ம் ஆண்டு மே மாதம் வெளியான இந்தப் படம் கேரளாவில் பெரும் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் தமிழ் ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

முதலில் மற்றுமொரு முன்னணி நடிகர் இந்த ரீமேக்கில் நடிப்பதாக இருந்தது. தற்போது ஷான் நிகம் கதாபாத்திரத்தில் கதிர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தினை 'பெட்ரோமாக்ஸ்' படத்தைத் தயாரித்த ஈகிள் ஐ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தமிழில் 'ஜீரோ' படத்தை இயக்கிய ஷிவ் மோகா இதனை இயக்கவுள்ளார். தற்போது இந்த ரீமேக்கின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த ரீமேக் தொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x