Published : 22 Jan 2020 02:56 PM
Last Updated : 22 Jan 2020 02:56 PM

பேண்டஸி கதையில் இணையும் தனுஷ் - ராம்குமார்

ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் பேண்டஸி ஆக்‌ஷன் பாணியிலானது என்று தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, மாரி செல்வராஜ் இயக்கும் 'கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தில் ராஜிஷா விஜயன், யோகி பாபு, லால் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

'கர்ணன்' படத்தை முடித்துவிட்டு, 'முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' படங்களின் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தையும் 'பட்டாஸ்' படத்தைத் தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் படப்பூஜையுடன் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

ராம்குமார் படம் தவிர்த்து மற்றொரு படமும் சத்யஜோதி நிறுவனத்துக்காகச் செய்யவுள்ளார் தனுஷ். இதன் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும், ராம்குமார் படத்தில் நடித்துக் கொண்டே இயக்குநர் செல்வராகவன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார் தனுஷ். செல்வராகவன் படத்தை தாணு தயாரிக்கவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x