Published : 17 Jan 2020 07:37 PM
Last Updated : 17 Jan 2020 07:37 PM
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் 'பூமி' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
'கோமாளி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படமான 'பூமி' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் ஜெயம் ரவி. சுஜாதா விஜயகுமார் தயாரித்து வரும் இந்தப் படம் ஜெயம் ரவியின் 25-வது படமாகும்.
இந்தப் படத்தின் பிரதான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. லஷ்மண் இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். விவசாயத்தை மையப்படுத்திய படம் என்பதால், விவசாயிகளுக்கு நடுவில் ஜெயம் ரவி நிற்பது போல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வடிவமைத்து வெளியிட்டது.
தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. இதனால் 'பூமி' வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மே 1-ம் தேதி வெளியீடு என்று படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு டெட்லி ஒளிப்பதிவாளராகவும், இமான் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
'பொன்னியின் செல்வன்' முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு, அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி.
Happy to share the 2nd look of #Bhoomi !! See you in theatres on May 1st! God bless #BhoomiSecondLook#BhoomiFromMay1st@dirlakshman @theHMMofficial @sujataa_hmm @immancomposer @AgerwalNidhhi @venketramg @actorsathish @dudlyraj @prathool @onlynikil @shiyamjack pic.twitter.com/pREAwjtDqi
— Jayam Ravi (@actor_jayamravi) January 16, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT