Published : 15 Jan 2020 03:05 PM
Last Updated : 15 Jan 2020 03:05 PM

விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

'கடைசி விவசாயி', 'மாஸ்டர்', ‘க.பெ.ரணசிங்கம்’, 'மாமனிதன்', 'லாபம்', 'லால் சிங் சாத்தா', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இதில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது.

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மேகா ஆகாஷ், இயக்குநர் மோகன் ராஜா, விவேக், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நாளை (ஜனவரி 16) விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்தப் போஸ்டரை முன்வைத்து பல்வேறு திரையுலகப் பிரபலங்களும், விஜய் சேதுபதிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x